உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கரும்பு சாகுபடி பயிற்சி

கரும்பு சாகுபடி பயிற்சி

விருத்தாசலம்: சிறுவரப்பூரில் ஆத்மா திட்டம் சார்பில் கரும்பு விவசாயிகளுக்கு பயிற்சி தரப்பட்டது.அனைத்து கிராம கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் சார்பில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பயிற்சி நடந்தது. உதவி இயக்குனர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கரும்பு அதிகாரி பாஸ்கர் பயிற்சி அளித்தார்.வேளாண் அலுவலர் சிவகாமசுந்தரி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் தங்கதுரை, உதவி தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ், பஞ்சமூர்த்தி உட்பட விவசாயிகள் பங்கேற்றனர். அதில், கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ