மேலும் செய்திகள்
அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்ம்
14-Mar-2025
திட்டக்குடி; திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கணிதத் துறை சார்பில் சர்வதேச பயிற்சிப் பட்டறை நடந்தது.கல்லுாரி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார். விரிவுரையாளர் விஜயபாரதி வரவேற்றார். கணிதத்துறை தலைவர்கள் திட்டக்குடி அரசு கல்லுாரி சிவக்குமார், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி பாலசங்கு, விரிவுரையாளர் பொன்னுசாமி ஆகியோர் இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் கணிதவியலின் ஆய்வு மற்றும் அதன் ஆராய்ச்சி குறித்து பேசினர்.ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ், துணை ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை, விரிவுரையாளர்கள், மாணவர்கள் பங்கேற் றனர். துணை ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
14-Mar-2025