உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அண்ணாமலை பல்கலை.,யில் பயிற்சி பட்டறை நிறைவு

அண்ணாமலை பல்கலை.,யில் பயிற்சி பட்டறை நிறைவு

சிதம்பரம்:சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக வணிக நிர்வாக துறையில் ஆராய்ச்சி வழிமுறைகள் குறித்த பயிற்சி பட்டறை நிறைவு விழா நடந்தது. துறை தலைவர் அருள் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் காந்தி கிராமம் நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பஞ்சநாதம் பேசி, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் குமார், கலைப்புல முதல்வர் விஜயராணி வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியை பயிற்சி பட்டறை துணை இயக்குனர் திலீபன் ஒருங்கிணைப்பு செய்தார். விழாவில், உதவி பேராசிரியர்கள் சிவக்குமார், செந்தில்குமார், பாலமுருகன், ஆராய்ச்சி மாணவ மாணவிகள் கார்த்திக், மஹாலிங்கம், விக்னேஷ், ஆர்த்தி, அகிலா ஸ்டீபன், ஜோன்ஸ் ஓஷின், ப்ரியங்கா மற்றும் பூஜா தொகுத்து வழங்கினர்.ராமநாராயணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி