மேலும் செய்திகள்
மூதாட்டியின் உடல் தானம்
04-Dec-2024
சிதம்பரம்; மாற்றுத்திறனாளி வாலிபர், வாய்க்காலில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சிதம்பரம் அடுத்த செங்கல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் மோகன்,38; மாற்றுத்திறனாளி. பைக் மெக்கானிக்கான இவர், சிதம்பரத்தில் வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர், இரவு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை துணிசரமேடு வாய்க்காலில் இறந்து கிடந்தார். தகவலறிந்த சிதம்பரம் தாலுகா போலீசார், மோகன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மோகன் இறப்பில் சந்தேகம் உள்ளதால், தனிப்படை அமைத்து விசாரிக்க வலியுறுத்தி அவரது உறவினர்கள், வி.சி.க., மற்றும் மா.கம்யூ.,வினர் நெடுஞ்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
04-Dec-2024