உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நடுவீரப்பட்டு அருகே திருநங்கை தற்கொலை

நடுவீரப்பட்டு அருகே திருநங்கை தற்கொலை

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே திருநங்கை தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். நடுவீரப்பட்டு, பாலுார் அருகே சன்னியாசிப்பேட்டையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன மகன் சரத்குமார், 22; கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருநங்கையாக மாறிய இவர், தனது பெயரை சமீரா என மாற்றிக் கொண்டார். பட்டாம்பாக்கத்தில் திருநங்கைகளுடன் தங்கி வந்தார். நேற்று காலை சன்னியாசிப்பேட்டை வீட்டிற்கு வந்த சமீரா, தாய் ராணியிடம் பணம் கொடுத்து சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கிவருமாறு கூறினார். ராணி கடைக்கு சென்று திரும்பிய போது, சமீரா துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ