உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

கடலுார்: கடலுாரில் மாநகர பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.மாநகர பொது நல இயக்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை தாங்கினார். வி.சி.,மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பு சிறப்பு தலைவர் மருதவாணன் இரங்கல் உரையாற்றினர்.தமிழ்நாடு மீனவர் பேரவை மாவட்ட தலைவர் சுப்பராயன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் மன்சூர், நஸ்ருதீன், ராஜதுரை, பச்சையப்பன் உட்பட பலர் பங்கேற்று, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை