உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூழாங்கற்கள் கடத்தல்:  லாரிகள் பறிமுதல்

கூழாங்கற்கள் கடத்தல்:  லாரிகள் பறிமுதல்

விருத்தாசலம்: கூழாங்கற்களை கடத்திச்சென்ற லாரிகளை, சுரங்கத்துறை உதவி இயக்குனர் பறிமுதல் செய்து போலீசிடம் ஒப்படைத்தார். விருத்தாசலம் பகுதியில் இருந்து கூழாங்கற்கள், கிராவல் உள்ளிட்ட கனிமவளங்கள் அதிகளவு கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாவட்ட சுரங்கத்துறை உதவி இயக்குனர் செல்வக்குமார் நேற்று அதிகாலை ரகசிய வாகன தணிக்கை செய்தார். அப்போது, கருவேப்பிலங்குறிச்சி வழியாக தலா 3 யூனிட் கூழாங்கற்களை கடத்திச் சென்ற 2 டிப்பர் லாரிகளை மடக்கிப் பிடித்தனர். லாரி டிரைவர்கள் தப்பியோடிய நிலையில், கூழாங்கற்களுடன் லாரிகளை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து உதவி இயக்குனர் செல்வக்குமார் புகாரின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் வழக்குப் பதிந்து, தப்பியோடிய லாரி டிரைவர், அதன் உரிமையாளர்களை தேடி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை