உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆன்லைன் டெலிவரி நபரை தாக்கிய இருவர் கைது கணவர் மாயம் மனைவி புகார்

ஆன்லைன் டெலிவரி நபரை தாக்கிய இருவர் கைது கணவர் மாயம் மனைவி புகார்

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆன்லைன் பொருட்கள் டெலிவரி செய்ய வந்த நபரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் பெரியார் நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 25; இவர், விருத்தாசலத்தில் இயங்கி வரும் தனியார் ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்.நேற்று மதியம் தனது பைக்கில் டெலிவரி பொருட்களை எடுத்துக்கொண்டு ராஜேந்திரப்பட்டினம் அருகே வந்து கொண்டிருந்தார்.அப்போது எதிரில் வந்த கிளிமங்கலத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரின் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் வந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தராஜ் மற்றும் அவரது நண்பர் மேலநெடுவாயை சேர்ந்த இன்பராஜ் ஆகிய இருவரும், ராதாகிருஷ்ணனை பின் தொடர்ந்து சென்று சாத்தமங்கலம் பஸ் ஸ்டாப் அருகே வழிமறித்து தாக்கினர். காயமடைந்த ராதாகிருஷ்ணன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தராஜ், 28; இன்பராஜ், 39; இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை