குட்கா பதுக்கிய இருவர் கைது
ராமநத்தம், : ராமநத்தம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று மாலை 2:00 மணியளவில் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார், ராமநத்தம் பகுதி வணிக வளாகங்களில் சோதனை செய்தனர்.அப்போது, பழக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை இருந்தது தெரியவந்து, பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து, குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்த திட்டக்குடி அடுத்த பெரங்கியத்தைச் சேர்ந்த ஹாஜா மொய்தீன், 42, அரங்கூரை சேர்ந்த ரவி, 53 ஆகியோரை கைது செய்தனர். பறிமுதல் செய்த பொருட்கள் மதிப்பு ரூ.1.20 லட்சம் ஆகும்.