உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மணல் திருட்டு இருவர் கைது

மணல் திருட்டு இருவர் கைது

புவனகிரி : புவனகிரி அருகே ஆற்றில் இருந்து பைக்கில் மணல் திருடி சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.புவனகிரி அருகே மருதுார் சப் இன்ஸ்பெக்டர் கனகராஜ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வத்தராாயன்தெத்து வெள்ளாற்றில் மணலை திருடி மூட்டையாக கட்டி இரு பைக்கில் கடத்தி சென்றனர். இருவரையும் பிடித்து விசாரித்ததில், வாண்டியாங்குப்பம் ஞானசேகர், 52; மற்றும் வத்ராயன்தெத்து ஆனந்தபாபு, 35; என்பது தெரியவந்தது.மருதுார் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ