உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செம்மண் கடத்தல் இருவர் கைது

செம்மண் கடத்தல் இருவர் கைது

விருத்தாசலம், ; விருத்தாசலம் அருகே டிராக்டரில் செம்மண் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் நேற்று பாசிகுளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அப்பகுதியில் உள்ள முந்திரி காட்டில், அதேபகுதியைச் சேர்ந்த ராமசாமி, 56, சிவகுருநாதன், 24, ஆகிய இருவரும் டிராக்டரில் செம்மண் கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, ராமசாமி, சிவகுருநாதன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை