வேலை வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி : சிதம்பரத்தில் இருவருக்கு வலை
சிதம்பரம்: சிதம்பரத்தில், வி.ஏ.ஓ., வேலை வாங்கி தருவதாக ஒய்வு பெற்ற சார் பாதிவாளரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரம், வீரராகவன் தெருவை சேர்ந்தவர் சீனுவாசன், 62; சார் பதிவாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் கவுதம் என்பவருக்கு, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில், வி.ஏ.ஓ., வேலை வாங்கி தருவதாக, சிதம்பரம் அம்மாபேட்டையை சேர்ந்த கிருஷ்ணன் மகன் மாரிமுத்து, பரங்கிப்பேட்டையை சேர்ந்த அருணாச்சலம் மகன் தியாகராஜன் ஆகியோர், ரூ. 14 லட்சம், சீனுவாசனிடம் வாங்கியுள்ளனர். வேலை வாங்கி தராமல், போலி பணி ஆணையை சீனுவாசனிடம் கொடுத்துள்ளனர். இதுகுறித்து சீனுவாசன் சிதம்பரம் நகர போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சிவானந்தம் வழக்கு பதிவு செய்து, மாரிமுத்து, தியாகராஜன் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.