உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலீஸ்காரருக்கு மிரட்டல் கடலுாரில் இருவர் கைது

போலீஸ்காரருக்கு மிரட்டல் கடலுாரில் இருவர் கைது

கடலுார்: போலீஸ்காரரை பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் புதுநகர் காவல் நிலைய போலீஸ்காரர் ஆனந்தன், 38; இவர் மற்றொரு போலீஸ்காரர் மயிலப்பன் என்பவருடன், மஞ்சக்குப்பம் தனியார் பள்ளி அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்கு மஞ்சக்குப்பம் சண்முகம் பிள்ளை தெருவை சேர்ந்த விக்னேஷ், 30; முருகன், 56; ஆகியோர் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் விலகி செல்லுமாறு ஆனந்தன் கூறியுள்ளார். அப்போது, விக்னேஷ், முருகன் ஆகியோர் ஆனந்தனை ஆபாசமாக திட்டி பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்து கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விக்னேஷ், முருகனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை