உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 2 வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு நெல்லிக்குப்பத்தில் துணிகரம்

2 வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு நெல்லிக்குப்பத்தில் துணிகரம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த தோட்டப்பட்டை சேர்ந்தவர் ராமமூர்த்தி,80; நேற்று அதிகாலை 2:30 மணிக்கு இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 16 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடி சென்றனர்.இதையடுத்து 500 மீட்டர் துாரத்தில் நத்தப்பட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர் ஜவகர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று, மாடியில் பீரோவில் இருந்த ஒன்னரை சவரன் நகை மற்றும் 500 கிராம் வெள்ளி பொருட்களை திருடினர். அங்கிருந்த கீழே இறங்கியவர்கள் அறையில் ஜவகர், அவரது மனைவி மானசா, குழந்தைகள் துாங்கிக் கொண்டிருப்பதை பார்த்தனர். அப்போது, மானசா கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தாலி செயினை பறித்தனர். திடுக்கிட்ட மானசா கூச்சலிடவே மர்ம நபர்கள் தப்பினர். நகையின் மதிப்பு 8 லட்சம் ரூபாய் ஆகும்.தகவலறிந்த நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரனை செய்தனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ