மணல் கடத்திய இருவர் கைது
விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே பைக்கில் ஆற்றுமணல் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் நேற்று வேட்டக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, வேட்டக்குடியைச் சேர்ந்த விஸ்வநாதன், 51; ஆனந்தகுடி கிழக்கு தெருவைச் சேர்ந்த பரந்தமன், 60. ஆகியோர் சாக்குமூட்டையில் ஆற்று மணல் கடத்திச் சென்றது தெரிய வந்தது.இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர்.