உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இரு பெண்கள் மாயம்: போலீஸ் விசாரணை

இரு பெண்கள் மாயம்: போலீஸ் விசாரணை

திட்டக்குடி: திட்டக்குடி அருகே கல்லுாரிக்கு சென்ற மகள் காணவில்லை என தாய் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவேல் மகள் ராகவி, 19; பி.எஸ்சி., அக்ரி, இரண்டாம் ஆண்டு படிக்கிறார். கடந்த 3ம்தேதி காலை 8:00 மணியளவில் கல்லுாரிக்கு புறப்பட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து அவரது தாய் வேல்மதி கொடுத்த புகாரின் பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து ராகவியை தேடி வருகின்றனர்.

விருத்தாசலம்

கருவேப்பிலங்குறிச்சி அடுத்த டி.வி.புத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் பாரதி, 24; இவர் கடந்த 4ம் தேதி கோவிலுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் முனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, பாரதியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !