உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அடையாளம் தெரியாத நபர் சாவு

அடையாளம் தெரியாத நபர் சாவு

மந்தாரக்குப்பம், : மந்தாரக்குப்பம் அடுத்த வீணங்கேனி சாலையில் மயங்கி கிடந்த நபர் நேற்று இறந்தார்.மந்தாரக்குப்பம் அடுத்த வீணங்கேனி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 17 ம் தேதி இரவு 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் மயங்கிய நிலையில் கிடந்தார். மந்தாரக்குப்பம் போலீசார் அந்த நபரை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று காலை இறந்தார். இது குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து இறந்த நபர் யார் என்பது குறித்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரை பற்றி தகவல் தெரிந்தால் 94981 00582 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை