உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பல்கலையில் உறுதிமொழியேற்பு 

பல்கலையில் உறுதிமொழியேற்பு 

சிதம்பரம்: சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பிரகாஷ் தலைமை தாங்கி, போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர். சிறப்பு விருந்தினராக சப் கலெக்டர் கிஷன்குமார் பங்கேற்றார். நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர் (தேர்வு) குமார், அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி மற்றும் புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ