மேலும் செய்திகள்
மனநலம் பாதிக்கப்பட்ட 50 வயது பெண் மீட்பு
05-Aug-2025
24வது நினைவஞ்சலி கூட்டம்
08-Aug-2025
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் உரிமம் பெறாமல் இயங்கும் மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார். அவரது செய்திக்குறிப்பு: கடலுார் மாவட்டம் முழுவதும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதித்தவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதை பயன்பாட்டிற்கு ஆளானவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் இயங்குகின்றன. இத்தகைய மனநல நிறுவனங்கள் அனைத்தும் உரிமம் பெற மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும். மாவட்டத்தில் பதிவு பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் உரிய முறையில் ஒரு மாத காலத்திற்குள் முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை- 600 010 என்ற அலுவலகத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். மனநல மையங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை https://tnhealth in gov.in/ingovin/dme/dme.php என்ற இணையதள முகவரியிலோ, தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். உரிமம் பெறாமல் இயங்கும் மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
05-Aug-2025
08-Aug-2025