மேலும் செய்திகள்
நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
25-Sep-2025
விருத்தாசலம்:விருத்தாசலத்தில், நகர தி.மு.க., பாக இளைஞரணி நியமனம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, நகர செயலர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட ஆதி திராவிட நலக்குழு அமைப்பாளர் ராமு, அவைத்தலைவர் செங்குட்டுவன், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் அருள்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ் வரவேற்றார். மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார் பேசினார். நிகழ்ச்சியில், துணை அமைப்பாளர்கள் இளங்கோவன், ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாசில், நகர துணை செயலர் சந்தானலட்சுமி சுந்தரமூர்த்தி, நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தளபதி குமார், தளபதி, கார்த்தி, நிஷாந்த், அஜய் மற்றும் பாக இளைஞரணி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
25-Sep-2025