மேலும் செய்திகள்
மக்கள் முன்னேற்றக் கழகம் 3ம் ஆண்டு தொடக்க விழா
01-Nov-2025
கடலுார்: கடலுார் வி ஸ்கொயர் மாலின் 3ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. கடலுார் பாரதி சாலையில் வி ஸ்கொயர் மால் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, உலகத்தரம் வாய்ந்த 3 பி.வி.ஆர்., திரை அரங்குகள், சிறுவர்களுக்கான விளையாட்டு சாதனங்கள், முன்னணி நிறுவனங்களின் புட் கோட், ஜவுளிகள், பொழுது போக்கு அம்சங்கள், ஷாப்பிங் செய்வதற்கான முன்னணி நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்த மாலின் 3ம் ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது. மால் உரிமையாளர் அனிதா ரமேஷ், விழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து, எல்.இ.டி., ஸ்கீரினை திறந்து வைத்து வாடிக்கையாளர்கள், ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். விழாவில், மால் நிர்வாக இயக்குனர் சரவணன், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.
01-Nov-2025