உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வள்ளிவிலாஸ் ஆலயா பள்ளி மாணவர்கள்; சி.பி.எஸ்.இ.,தேர்வில் தொடர் சாதனை

வள்ளிவிலாஸ் ஆலயா பள்ளி மாணவர்கள்; சி.பி.எஸ்.இ.,தேர்வில் தொடர் சாதனை

தரம் வாய்ந்த கல்வி வழங்கி, சிறந்த மாணவர்களை உருவாக்கி வருகிறோம் என, நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு ஸ்ரீவள்ளிவிலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ.,பள்ளி தாளாளர் சீனிவாசன், செயலாளர் இந்துமதி சீனிவாசன் கூறினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது,நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு ஸ்ரீவள்ளிவிலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ.,பள்ளி தரம் வாய்ந்த கல்வி வழங்கி, சிறந்த மாணவர்களை உருவாக்கி வருகிறது. 2024---25ம் கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. பிளஸ் 2 தேர்வில் மாணவர் நிதிஷ் 600க்கு 477 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர் கிரண் 500க்கு 480 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் இப்பள்ளி மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகின்றனர். ஆங்கிலம் மற்றும் அறிவியல் தொடர்பாக போட்டிகள், எழுத்து பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளது. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர். தற்போது மழலையர் வகுப்பு முதல், பிளஸ் 1 வரை மாணவர் சேர்க்கை நடக்கிறது. இந்தாண்டு பிளஸ் 1 வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் 30 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை கல்வி கட்டணத்தில் சிறப்பு சலுகை அளிக்கப்படுகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை