உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டித்தர கோரிக்கை

வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டித்தர கோரிக்கை

பெண்ணாடம் : திருமலை அகரத்தில் பழுதான வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை இடித்து அகற்றி புதிதாக கட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெண்ணாடம், திருமலை அகரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள வி.ஏ.ஓ., அலுவலகம் மூலம் இப்பகுதி மக்கள் பட்டா, சிட்டா மாற்றம், வருமானம், ஜாதி, இருப்பிடம், முதியோர் உதவித்தொகை, விவசாய காப்பீடு திட்டம் உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்கள் பெற்று பயனடைந்தனர். நாளடைவில் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் பராமரிப்பின்றி பக்கவாட்டு சுவர்கள் மற்றும் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு மழைநீர் கசிவதால் மழைக்காலங்களில் அமர்ந்து பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கட்டடத்தை சுற்றிலும் முட்புதர்கள் அதிகளவில் மண்டியுள்ளன.இதனால் இங்கு பணிபுரியும் வி.ஏ.ஓ., பெண்ணாடம் அலுவலகத்தில் பணிபுரிவதால் இப்பகுதி மக்கள் 2 கிலோ மீட்டர் துாரம் சென்று சான்றிதழ்கள் பெற வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதியோர்கள், பெண்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே, திருமலை அகரத்தில் பழுதான வி.ஏ.ஓ., அலுவலகத்தை இடித்து அகற்றி புதிதாக கட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ