உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா  

வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா  

கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கடந்த 5ம் தேதி இரவு தங்க கருட சேவை, 6ம் தேதி நாச்சியார் திருக்கோலத்தில் ஊஞ்சல் சேவை, 8ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 9ம் தேதி வெண்ணெய்த்தாழி உற்சவம் நடந்தது. நேற்று திருத்தேர் விழாவையொட்டி வரதராஜ பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், கோவில் அறங்காவலர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி