மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவி வழங்கல்
10-Dec-2025
சிதம்பரம்: சிதம்பரத்தில், த.மா.கா., தலைவர் வாசன், 61 வது பிறந்தநாள் விழாவையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கடலுார், மத்திய மாவட்ட, த.மா.கா., சார்பில் நடந்த விழாவிற்கு, மத்திய மாவட்ட தலைவர் ரஜினிகாந்த் தலைமை தாங்கினார். நகர தலைவர் நாகராஜன் வரவேற்றார். மண்டல மகளிர் அணி துணைத்தலைவர் ராஜலஷ்மி, மாவட்ட துணைத் தலைவர் சுப்புலட்சுமி, சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் கணேஷ் முன்னிலை வகித்தனர் மாநில பொதுச் செயலாளர் வேல்முருகன் பங்கேற்று, கேக் வெட்டி, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்வையொட்டி, காலை 9:00 மணிக்கு, மேல வீதி சிறை மீட்ட விநாயகர் கோவிலில், அபிஷேக ஆராதனைகள், அரசு மருத்துவமனையில், 25 பேர் ரத்ததானம் மற்றும் அன்பழகம் முதியோர் இல்லத்திற்கு, மளிகை, அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கல் ஆகிய பல்வேறு உதவிகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் குணா, குமார், இன்பரசு, நடராஜன், பாலச்சந்தர், இளைஞர் அணி தலைவர் துஷ்யந்தன் மற்றும் நகர நிர்வாகிகள் வீரமணி, பிரபு, சாந்தி, பிரதாப், பால முரளி, இளையபெருமாள், குரு, இளையராஜா, சாய், முரளி கிருஷ்ணன், சங்கமித்ரா, செல்வி, பவானி மற்றும் பலர் பங்கேற்றனர். மாவட்ட பொதுச்செயலாளர் துரை சிங்காரவேல் நன்றி கூறினார்
10-Dec-2025