உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேப்பூரில் வி.சி., பேனர் அகற்றம் சாலை மறியலில் ஈடுபட முயற்சி

வேப்பூரில் வி.சி., பேனர் அகற்றம் சாலை மறியலில் ஈடுபட முயற்சி

வேப்பூர், : வேப்பூரில் வி.சி., பேனரை நகாய் ஊழியர்கள் அகற்றியதால், வி.சி., ஒன்றிய செயலர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது.வி.சி., சார்பில் மது, போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு, கடந்த 2ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துபேட்டையில் நடந்தது. இதற்கு, நல்லூர் ஒன்றிய வி.சி., சார்பில் வேப்பூர் கூட்டுரோடு மேம்பாலம் மற்றும் சாலையோரங்களில் பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.மாநாடு முடிந்ததால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் போஸ்டர்களை அகற்ற, நகாய் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி, நகாய் ஊழியர்கள் நேற்று காலை 10:00 மணியளவில் வேப்பூர் மேம்பாலத்தில் ஒட்டப்பட்ட வி.சி., பேனர்கள், போஸ்டர்கள் அகற்றினர்.இதனையறிந்த நல்லூர் வி.சி., ஒன்றிய செயலர் சந்தோஷ், பகல் 11:00 மணியளவில் வேப்பூர் கூட்டுரோட்டில் சாலையின் குறுக்கே கட்டை போட்டு மறியலில் ஈடுபட முயன்றார். தகவலறிந்து வந்த வேப்பூர் போலீசார், அவரை சமரசம் செய்ததை தொடர்ந்து, பகல் 11:10 மணியளவில் கலைந்து சென்றார். இது குறித்து இரண்டு தரப்பினரும் வேப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி