மேலும் செய்திகள்
வீனஸ் பள்ளியில் கலாசார விழா
02-Sep-2025
சிதம்பரம் : மாநில அளவிலான செஸ் போட்டியில், சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவி, முதலிடம் பெற்று சாதனை படைத்தார். மாணவிக்கு பள்ளி அளவில் பாராட்டு விழா நடந்தது. சிதம்பரம் தில்லைநகர் வீனஸ் மெட்ரிக் பள்ளியில் 5 ம் வகுப்பு பயிலும் மாணவி பிரகதா. திருச்சி இன்பேண்ட் பள்ளியில் கடந்த மாதம்10 ம் தேதி நடந்த மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்றார். இதில் 9 வயதுக்குட்பட்ட போட்டியில் பங்கேற்ற மாணவி, பிரகதா, இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து, மகாத்மா யூத் கிளப் சார்பில், 3 வது மாநில அளவிலான சதுரங்க போட்டி, அரியலுார் மாவட்டம், தத்தனுார் மீனாட்சி கல்லுாரியில், ஆகஸ்ட் 31 ம் தேதி நடந்தது. இதில் 30 க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். இதில், 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில், 7 க்கு 6 புள்ளிகள் பெற்று, வீனஸ் பள்ளி மாணவி, பிரகதா, முதலிடம் பெற்றார். அதனை தொடர்ந்து, மாநில அளவில் முதலிடம் பெற்ற வீனஸ் பள்ளி மாணவிக்கு, பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. வீ னஸ் குழுமப் பள்ளிகளின் நிறுவனர் வீனஸ் குமார், பள்ளி தாளாளர் ரூபியால்ராணி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர். முதல்வர் மகேந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
02-Sep-2025