மேலும் செய்திகள்
சிதம்பரம் வீனஸ் பள்ளியில் ஹிந்தி தேர்வு
25-Aug-2025
சிதம்பரம்: சிதம்பரம் குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் வீனஸ் பள்ளி மாணவர் கள் வெற்றி பெற்று சா தனை படைத்தனர். சிதம்பரம் அண்ணாமலை பலகலைகழக மைதானத்தில், ஏ.ஆர்.ஜி.,பள்ளி சார்பில், குறுவட்டப் போட்டிகள் நடத்தப்பட்டது . இதில் வீனஸ் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற 200 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வீனஸ் குழுமப் பள்ளி நிறுவனர் வீனஸ் குமார், பள்ளி முதல்வர் நரேந்திரன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினர். பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் உமா, ரஞ்சித், கோகுல்ராஜ் உள்ளிட்டோர் உட ன் இருந்தனர். கு றுவட்டப் விளையாட்டு போட்டிகளி ல் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பரிசுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக் கது.
25-Aug-2025