மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி
சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த வாழைக்கொல்லை கிராமத்தில் வேளாண்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரித்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கீரப்பாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சிவப்பிரியன் தலைமை தாங்கி மண்புழு உரம் தயாரிப்பது குறித்தும், அதற்கான அவசியம் குறித்தும் பேசினார். முன்னோடி விவசாயி செந்தில்ராயர் தனது வயலில் மண்புழு உரம் தயாரித்து அதனை நிலங்களில் பயன்படுத்தி மண் வளத்தை பெருக்கிய அனுபவம் குறித்து பேசினார். வேளாண் அலுவலர் சிவசங்கரன் விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சரவணன், பயிர் அறுவடை பரிசோதகர்கள் பிரியங்கா, வீராசாமி ஆகியோர் செய்திருந்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தசெல்வி நன்றி கூறினார்.