உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கால்நடை மருத்துவமனை இடிந்து விழும் அபாயம்

கால்நடை மருத்துவமனை இடிந்து விழும் அபாயம்

சேத்தியாத்தோப்பு: வளையமாதேவியில் கால்நடை மருத்துவமனை இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவியில் கடந்த 2016ம் கால்நடை மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டது. வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி, அம்மன்குப்பம், துறிஞ்சிக்கொல்லை, மதுவானைமேடு, நெல்லிக்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கால்நடைகள் சிகிச்சைக்காக அழைத்து வரப்படுகிறது. மழை காலங்களில் கட்டத்தின் மேல்தளத்தில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு வழிவதால் மருத்துவர்கள் அமர்ந்து பணி பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. தரைதளத்தில் போடப்பட்டுள்ள டைல்ஸ்கள் சேதமடைந்துள்ளது. கட்டடத்தின் துாண்கள், கால்நடை மருந்தகம் என அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே விரிசல் காணப்படுவதால் கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், மருத்துவமனை ஊழியர்களும், கால்நடை வளர்ப்போரும் அச்சமடைந்துள்ளனர். எனவே, கட்டடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை