வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்துார் கருப்பசாமி வித்யாலயா பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. ஏ.வி.கே.எஸ்., அறக்கட்டளை அறங்காவலர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். வியாபாரிகள் சங்க தலைவர் பக்கிரிசாமி, அறக்கட்டளை நிர்வாகி ராணி ஸ்ரீகாந்த், முன்னாள் மாவட்ட கல்வி அதிகாரி சக்திவேல் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ரமேஷ்பாபு வரவேற்றார்.கலை நிகழ்ச்சி, நடனம், பேச்சுப்போட்டி, கவிதை, சிலம்பம், உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்று தனித் திறமைகளை வெளிப்படுத்தினர். கீரப்பாளையம் வட்டார கல்வி அலுவலர் மணிவாசகம், வட்டார மேற்பார்வையாளர் ராஜசேகர் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினர். ஏற்பாடுகளை விநாயகபுரம் கருப்பசாமி அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.ஆசிரியை அருணா நன்றி கூறினார்.