விஜயகாந்த் பிறந்த நாள்
கடலுார் : கடலுார் வடக்கு மாவட்ட தே.மு.தி.க., சார்பில் அக்கட்சி நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா நடந்தது. கடலுார் அடுத்த கண்ணாரப்பேட்டையில் நடந்த விழாவில், தே.மு.தி.க., வடக்கு மாவட்ட அவைத்தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார். வள்ளி ராஜாராம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து பங்கேற்றார். விழாவில் ஏழைகளுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வங்கப்பட்டது. மாவட்ட பொருளாளர் ராஜ், மாநகர செயலாளர் சரவணன், மாவட்ட துணை செயலாளர் சித்தநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் துணை சேர்மன் அய்யனார், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜா, ஒன்றிய செயலாளர் கலாநிதி, மாவட்ட இணை செயலாளர் ராஜசேகர் மற்றும் நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். ஒன்றிய அவைத் தலைவர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.