உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரசிகர்களுடன் படம் பார்த்த விஜயகாந்த் மகன்

ரசிகர்களுடன் படம் பார்த்த விஜயகாந்த் மகன்

பண்ருட்டி: பண்ருட்டி சினிமா தியேட்டரில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் தான் நடித்து வெளியான படத்தை ரசிகர்களுடன் பார்த்தார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மகன் இளைய மகன் சண்முகபாண்டியன் நடித்த 'படைத்தலைவன்' திரைப்படம் பண்ருட்டி புவனேஸ்வரி தியேட்டரில் கடந்த 13ம் தேதி வெளியானது. இங்கு, நேற்று வந்த சண்முகபாண்டியன், ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்தார். முன்னதாக, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து தலைமையில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். பின், சண்முகபாண்டியன் கூறுகையில், ' மக்கள் என்னை ஹீரோவாக ஏற்றுக் கொள்ளட்டும். பிறகு அரசியலை பற்றி பார்க்கலாம். எனது அண்ணன் அரசியலில் உள்ளார். நான் திரைத்துறையில் இருக்கிறேன். தந்தை விஜயகாந்தை போன்று, மக்கள் விழிப்புணர்வு கொண்ட படங்களில் நடிப்பேன். கொம்பு சீவி உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி