அழிச்சிக்குடியில் கிராம சபை கூட்டம்
புவனகிரி; மேல் புவனகிரி ஒன்றியம் அழிச்சிக்குடி ஊராட்சி அலுவலகத்தில் நேற்று முன் தினம் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.ஊராட்சி தலைவர் அமிர்தவல்லி கலியமூர்த்தி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் இளைய ராஜா முன்னிலை வகித்தார். செயலாளர் ஜெய்சங்கர் மன்ற பொருள் வாசித்தார். தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட துணை பி.டி.ஓ., சங்கரி பங்கேற்றார்.கூட்டத்தில் ஆத்மா திட்ட இயக்குனர் சாரங்கபாணி மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.ஊராட்சி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.