உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிராம சாலை சேதம்: மக்கள் கடும் அவதி

கிராம சாலை சேதம்: மக்கள் கடும் அவதி

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வாழைக்கொல்லை கிராம சாலை ஜல்லிகள் பெயர்ந்து பழுதடைந்துள்ளதால் மக்கள் அவதியடைகின்றனர். சேத்தியாத்தோப்பு அடுத்த வீராணம் ஏரிக்கரை சாலையில் உள்ள வாழைக்கொல்லை பஸ் நிறுத்தத்தில் இருந்து கிராமத்திற்குள் செல்லும் சாலை ஒரு கிலோ மீட்டர் துாரம் உள்ளது. கீரப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட இந்த சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. சாலையில் ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். வாகனங்கள் பழுது ஏற்படுகிறது. புதிய சாலை அமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக கிராம மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இனியாவது புதிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி