கிராம மக்கள் எஸ்.பி.,யிடம் மனு
கடலுார்: கடலுாரில் கிராம மக்களை அவதுாறாக பேசிய தனியார் நிறுவன இயக்குனர் மீது குடிகாடு கிராம நிர்வாக தலைவர் ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள், கடலுார் எஸ்.பி.,யிடம் மனு கொடுத்தனர். மனு விபரம்: கடந்த 5ம் தேதி எங்கள் ஊரில் உள்ள தனியார் கம்பெனியிலிருந்து ரசாயன வால்வு வெடித்து கழிவு வெளியானதால், கிராமத்தைச் சேர்ந்த 120 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். நிறுவனம் சார்பில் அளித்த விளக்கத்தில் கிராம மக்களை அவதுாறாக பேசியும், மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் மீது பொய்வழக்கு போட்டுள்ளனர். அவதுாறாக பேசிய நிறுவனத்தின் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.