உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின்வாரிய அதிகாரிகளின் திட்டமிடாத செயல் 3 நாட்களாகியும் கிராமங்களுக்கு சப்ளை இல்லை

மின்வாரிய அதிகாரிகளின் திட்டமிடாத செயல் 3 நாட்களாகியும் கிராமங்களுக்கு சப்ளை இல்லை

கடலுார்: மின்வாரிய அதிகாரிகள் சரியான திட்டமிடல் இல்லாததால் பல கிராமங்களில் 3 நாட்களாகியும் மின்சாரம் வழங்காமல் கிராம மக்கள் குடிநீருக்கு திண்டாடி வருகின்றனர்.வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக மாவட்ட நிர்வாகம் கலெக்டர் தலைமையில் அதிகாரிகளுடனான முன்னெச்சரிக்கை கூட்டம் நடத்தினார்.இதில் மின்வாரியத்துறை 2200க்கும் மேற்பட்ட முன்களப்பணியாளர்கள் தயாராக இருப்பதாக தெரிவித்தனர். 30ம் தேதி இரவு புயல் கரையை கடந்தது. இதில் கடலுார் தாலுகா மட்டுமே புயலால் மின்சாரம் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும். மற்ற பகுதிகளில் அதிகளவு மழையில்லாததால் பாதிப்பில்லை.மறுநாளே போதுமான அளவு மின்வாரிய ஊழியர்கள் பணியில் இருந்திருந்தால் மின்சாரம் உடனடியாக வழங்கப்பட்டிருக்கலாம்.ஆனால் மெயின் ரோட்டில் மட்டும் மின்சாரம் சப்ளை கொடுக்கப்பட்டது. மீதியுள்ள அனைத்து மாநகரம், கிராமப்பகுதிகளில் சப்ளை வழங்கப்படவில்லை. இதனால் குடிநீர் வினியோகம் தடைபட்டது. கிராமப்பகுதிகள் மட்டுமல்லாமல் நகர பகுதிகளிலும் குடிநீருக்கு அல்லோலப்பட்டனர். 30 நிமிடம் கூட மின்சாரம் வழங்கப்படாததால் மோட்டார் போடக் கூட வாய்ப்பில்லாமல் போனது. நேற்றும் மின்சாரம் முழுவதுமாக நிறுத்தி வைத்தனர். கடலுார் மாவட்டத்தில் புயல்பாதிக்காத பிற பகுதிகளில் இருந்து ஊழியர்களை வரவழைத்திருந்தால் இப்பிரச்னை எளிதாக கையாண்டிருக்க முடியும். ஒரு சில ஊழியர்களே தொடர்ந்து குளிர் மழையில் அவதிப்பட வேண்டிய அவசியம் இருந்திருக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி