உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உக்ரைன் நாட்டு பெண்ணை கரம்பிடித்த விழுப்புரம் வாலிபர்

உக்ரைன் நாட்டு பெண்ணை கரம்பிடித்த விழுப்புரம் வாலிபர்

விழுப்புரம்: உக்ரைன் நாட்டு காதலியை விழுப்புரம் வாலிபர் பெற்றோர் சம்மதத்துடன் தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்து கொண்டார்.விழுப்புரம், வி.மருதுாரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் - சுதா தம்பதி மகன் உதயகுமார்,30; பி.இ., பட்டதாரியான இவர், எம்.எஸ்., படித்து முடித்த பின் ஸ்லோவேக்கியா நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த உக்ரைன் நாட்டை சேர்ந்த செர்ஹி கைலோவி - இரினா கைலோவி தம்பதியின் மகள் அனஸ்டாசியா என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. தங்கள் பெற்றோரின் சம்மத்துடன் இருவரும் தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்து கொள்ள, கடந்த 30ம் தேதி ஸ்லோவேக்கியாவில் இருந்து விழுப்புரம் வந்தனர். நேற்று அவர்களுக்கு, தமிழ் கலாசாரப்படி, டி கப்பியாம்புலியூர் பெருமாள் கோவிலில் திருமணம் நடைபெற்றது. மணப்பெண் அனஸ்டாசியா, தமிழர் கலாசாரப்படி பட்டு சேலை அணிந்திருந்தார். மணமக்களை, அமைச்சர் பொன்முடி வீடு தேடிச் சென்று வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை