உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண் வன்கொடுமை: காங்., ஆர்ப்பாட்டம் 

பெண் வன்கொடுமை: காங்., ஆர்ப்பாட்டம் 

கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகே, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கண்டன உரையாற்றினார். மாவட்ட மகளிர் அணி தலைவி கல்பனா பாலு, துணைத்தலைவி, கிரிஜா, இளைஞர் காங்., மாநில ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித், செயலாளர் ராஜாராம், ஓ.பி.சி., மாநில செயலாளர் ராமராஜ், நகர தலைவர்கள் வசந்தராணி, ஹபிபா, தனுஸ்ரீ, பழனியம்மாள், அகஸ்தியா, பிரேமலதா, ஆதிலட்சுமி, மரியம், மங்கள லட்சுமி, இசை ராணி உட்பட பலர் பங்கேற்றனர். கோவையில் கல்லுாரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களை கண்டித்தும், கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை