உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விஷ்வ ஹிந்து பரிஷத் வேல் வழங்கும் விழா

விஷ்வ ஹிந்து பரிஷத் வேல் வழங்கும் விழா

கடலுார்: சிதம்பரம் பாம்பன் சுவாமி மடாலயத்தில், விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் வழங்கும் விழா நடந்தது. கந்த சஷ்டியை முன்னிட்டு நடக்க உள்ள வேல் பூஜைக்காக சிதம்பரத்தில், விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் வழங்கும் விழா நடந்தது. புதுச்சேரி கோட்ட சமுதாய நல்லிணக்க அமைப்பாளர் டாக்டர் ஜெயமுரளி, கோபிநாத், முன்னிலை வகித்தார். விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில துணைத்தலைவர் ஞானகுரு சிறப்புரையாற்றி வேல் வழங்கினார். புதுச்சேரி கோட்ட சேவா அமைப்பாளர் ஜோதி குருவாயூரப்பன் பெற்றுக்கொண்டார். மாநில தர்ம யாத்திரை அமைப்பாளர், பேராசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். சபாநாயகர் கோவில் ராஜா தீக் ஷிதர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஆடிட்டர் விஸ்வநாதன், ஜெயராம் விடுதி உரிமையாளர் கோகுலகிருஷ்ணன் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் ஹரிதாசன், துணைத்ததலைவர் திருநாராயணன், பொருளாளர் கிருஷ்ணசாமி, விசேஷ சம்பர்க்க முருகன், சேவா அமைப்பாளர் முத்துக்குமரன், இணை சேவா சீனிவாசன், பூஜாரிகள் அமைப்பாளர் கலைமணி, பா.ஜ.,மாநில பொறுப்பாளர் பாலுவிக்னேஸ்வரன், ரகுபதி, பாலசுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர். சிதம்பரம் நகர தலைவர் ராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை