மேலும் செய்திகள்
விஸ்வகர்ம கைவினைஞர் சங்க கிளை துவக்க விழா
22-Apr-2025
சிதம்பரம் : குரூப்-1 தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவிக்கு தமிழ்நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.சிதம்பரம் அடுத்த வாழைக்கொல்லை கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வன் மகள் கதிர்செல்வி. குரூப்-௧ தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதித்தார். இதையடுத்து தமிழ்நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்க மாநில தலைவர் சேகர் தலைமையில் நிர்வாகிகள் மாணவியின் வீட்டிற்கு சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து நினைவுப் பரிசு வழங்கினர். மாநில இளைஞரணி செயலாளர் ரமேஷ், நகர செயலாளர் முத்துக்குமார், மாநில தொழிற்சங்க செயலாளர் ராமச்சந்திரன் துணை செயலாளர்கள் பாலசுப்ரமணியன், தில்லைநடராஜன், குமார் உடனிருந்தனர்.
22-Apr-2025