மேலும் செய்திகள்
பள்ளி கல்லுாரி செய்தி
12-Jan-2025
கடலுார்; கடலுார் மாவட்ட விஸ்வகர்மா நலச்சங்கம் சார்பில் 25ம் ஆண்டு விஸ்வகர்மா சமுதாய மணமக்கள் நேர்காணல் மற்றும் ஜாதக பரிவர்த்தனை, மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.கடலுாரில் நடந்த விழாவிற்கு, சங்க தலைவர் ராஜா தலைமை தாங்கினார். செயலாளர் நாகராஜன் வரவேற்றார். ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் சக்கரவர்த்தி, ராஜேந்திரன், ராஜகோபால், மணி, தேவநாதன் முன்னிலை வகித்தனர். சென்னை ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பாலு, விழுப்புரம் விஸ்வகர்மா நண்பர்கள் சங்க செயலாளர் உமாபதி சிறப்புரையாற்றினர். நடராஜன், மோகன், கண்ணன் ஆகியோர் வரன் அறிமுகப்படுத்தினர். இதில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அப்போது, பொருளாளர் ஆனந்தகுமார், துணை தலைவர்கள் மோகன், கிருஷ்ணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
12-Jan-2025