மேலும் செய்திகள்
பாட்டாளி தொழிற் சங்கத்தினர் உண்ணாவிரதம்
29-Sep-2024
வடக்கு மாவட்ட பா.ம.க., செயலாளர் நியமனம்
09-Oct-2024
பண்ருட்டி: கடலுார் வடக்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டம், வடக்குத்து திருமண மண்டபத்தில் நடந்தது.மாவட்ட செயலாளர் ரவிசந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செல்வகுமார் வரவேற்றார். ஒன்றிய, நகர நிர்வாகிகள் சக்திவேல், அய்யப்பன், சதாசிவம், அறிவழகன், மூர்த்தி, பிரகாஷ், சார்லஸ், சண்முகம், ஆனந்த், வேங்கடத்தான், செல்வம் முன்னிலை வகித்தனர்.முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் வைத்தியலிங்கம், காட்டுக்கூடலுார் சேகர், மாவட்ட செயற்குழு சக்கரவர்த்தி, அமைப்பு செயலாளர் கயல்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலை பணியை விரைவாக துவக்க வேண்டும், என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் படித்த மாணவர்களுக்கு என்.எல்.சி., நிர்வாகம் முன்னுரிமை அளித்து வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
29-Sep-2024
09-Oct-2024