உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரத்தில் வாலிபால் போட்டி பரிசளிப்பு

சிதம்பரத்தில் வாலிபால் போட்டி பரிசளிப்பு

சிதம்பரம்:சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வித்துறை வளாகத்தில், கல்லூரிகளுக்கு இடையேயான வாலிபால் மற்றும் யோகா விளையாட்டு போட்டிகள் நடந்தது. துவக்க விழாவில் உடற்கல்வித்துறை தலைவர் மற்றும் இயக்குனர் சிவக்குமார் வரவேற்றார். மாணவர் சேர்க்கை, இணை இயக்குநர் பாலபாஸ்கர் தலைமை தாங்கினார். இதில் கடலுார் , விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி கல்லுாரிகளை சேர்ந்த 23 மாணவர்கள் பங்கேற்றனர். இதற்கான பரிசளிப்பு விழாவில் கல்லுாரி மேம்பாட்டு கவுன்சில் இணை ஒருங்கிணைப்பாளர் முகமது பர்வீஸ் வெற்றி வெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரி முதலிடமும், அண்ணாமலை பல்கலைக்கழக கேம்பஸ் அணி 2ம் இடமும் , கடலுார் செயின்ட் ஜோசப் கல்லுாரி மற்றும் குத்தாலம் அரசு கல்லுாரி மூன்றாமிடமும் பெற்றனர். பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளுக்கான கன்வீனர் எம்.ஜி.ஆர்., அரசு கலைக் கல்லுாரி பேராசிரியர் சரவணன் நன்றி கூறினார். உடற்கல்வித்துறை இணை இயக்குனர் வெங்கடாசலபதி, பேராசிரியர்கள் பாலமுருகன், பொன்சன், முத்து இலக்குவன், உதவி பேராசிரியர் சேவி மற்றும் கன்வீனர் பானுபிரியா மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் வீரமணி, ஜோதி பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை