உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் உதவி மையம் தேவை

 வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் உதவி மையம் தேவை

மந்தாரக்குப்பம்: வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் நிரப்புவதற்கு உதவி மையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மந்தாரக்குப்பம் பகுதியில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள படிவங்களை திரும்பபெறும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் தன்னாலர்வர்கள் மூலம் தேர்தல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி, கெங்கைகொண்டான் பேரூராட்சியில் தீவிரமாக நடந்து வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: 'வாக்காளர் படிவம் நிரப்புவதில் ஏராளமான சந்தேகங்கள் உள்ளன. வாக்காளர் படிவத்தை எப்படி நிரப்புவது என்று தெரியாமல் பலர் தவிக்கின்றனர். விண்ணப்ப படிவங்களை நிரப்புவதற்கு போதுமான உதவி மையங்கள், தன்னார் வலர்கள் இல்லை. படிவம் வழங்குவதிலும், திரும்ப பெறுவதிலும் மட்டுமே ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். வாக்காளர் படிவத்தை நிரப்புவதற்கும் ஒத்துழைப்பு அளிக்கவும் பயிற்சி பெற்ற ஊழியர்களை பணியமர்த்தி உதவி மையம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை