உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாக்காளர் பட்டியல் ஆலோசனை கூட்டம்

வாக்காளர் பட்டியல் ஆலோசனை கூட்டம்

கடலுார்: கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., சுந்தரராஜன் தலைமை தாங்கி பேசினார். தாசில்தார் மகேஷ் முன்னிலை வகித்தார். கடலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், வீடு வீடாக சென்று ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த தொடர்பான பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இவர்களுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் உதவி புரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை