| ADDED : ஜன 08, 2024 05:52 AM
விருத்தாசலம்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் செயல்படும் முறை குறித்து செயல் விளக்கம் விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் நடந்தது.இந்த மையத்தில், பொதுமக்கள் வாக்களிப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் செந்தில்குமார் தலைமை தாங்கி, மையத்தை துவக்கி வைத்தார்.பின்னர், வாக்களிக்கும் முறை, அது செயல்படும் விதம், வி.வி., பேட் கருவியில் மக்கள் வாக்களிப்பதை தெரிந்து கொள்வது குறித்த செயல் விளக்க விழிப்புணர்வு பயிற்சி அளித்தார்.தேர்தல் பிரிவு உதவியாளர் நரேஷ் முகுந்தன், தேர்தல் கணினி இயக்குனர்கள் சுரேஷ், அருண்குமார் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மாதிரி ஓட்டு போட்ட பின்னர், வி.வி., பேட் கருவியில் தாங்களின் ஓட்டு பதிவாகியுள்ளதா என அறிந்தனர்.இதேபோல், விரைவில் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று மாதிரி ஓட்டுப் பதிவு குறித்து செயல் விளக்க பயிற்சி நடக்க உள்ளது என அதிகாரி தெரிவித்தார்.