உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெலாந்துறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

பெலாந்துறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

பெண்ணாடம்: வடகிழக்கு பருவமழை காரணமாக பெலாந்துறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக கடலுார், அரியலுார் மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அரியலுார் மாவட்டம், ஆணைவாரி மற்றும் உப்பு ஓடைகளில் இருந்து பாய்ந்த மழைநீரால் வெள்ளாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று காலை 7:00 மணி நிலவரப்படி பெண்ணாடம் அடுத்த பெலாந்துறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் 6 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. 6 ஷட்டர்கள் மூலம் 673 கன அடி உபரிநீர் வெள்ளாற்றிலும், 100 கன அடி நீர் வாய்க்கால் மூலம் பாசன ஏரிகளுக்கும் திறந்து விடப்பட்டுள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் வெள்ளாற்றங்கரையோரம் உள்ள போர்வெல்லின் நீர்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை