உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல் திறப்பு

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு குறுக்குரோட்டில் புவனகிரி ஒன்றிய அ.தி.மு.க.,. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது.ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார்.மாநில எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் இளஞ்செழியன், விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் கனகசிகாமணி, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், ஒன்றிய அவைத்தலைவர் செல்வராசு, ஒன்றிய செயலாளர் சீனிவாசன், பேரவை செயலாளர் சாமிநாதன், மாவட்ட துணை செயலாளர் வீரமூர்த்தி, மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயப்பிரியா முன்னிலை வகித்தனர். ஒன்றிய நிர்வாகி ஜெயசீலன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் முருகானந்தம், தாஸ் ஆகியோர் மாற்று கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க., வில் இணைந்தனர். விவசாய பிரிவு மாவட்ட துணை செயலாளர் அரங்சாமி, எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் சுரேஷ், செல்வக்குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ