உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காட்சி பொருளான நீர்த்தேக்க தொட்டி

காட்சி பொருளான நீர்த்தேக்க தொட்டி

சேத்தியாத்தோப்பு: புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பல மாதங்களாகியும் குடிநீர் வினியோகம் இல்லாததால், பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். கீரப்பாளையம் ஒன்றியம் பூதங்குடி ஊராட்சியில் அள்ளூர், பாழ்வாய்க்கால் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த ஊராட்சியில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாழ் வாய்க்கால் சிதம்பரம் சாலை பகுதி மக்களின் குடி தண்ணீர் தேவைக்கு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 18 லட்சம் மதிப்பில், 6 மாதங்களுக்கு முன் கட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை குடிநீர் வினியோகம் இல்லாமல், வெறும் காட்சி பொருளாக நீர் தேக்க தொட்டி காட்சி அளிக்கிறது. இதனால், போதிய குடிதண்ணீர் வினியோகம் இன்றி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் போர்வெல் மின்மோட்டர் அமைத்து குடிநீர் வினியோகம் துவங்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை